ஆக 21, 2026

காஞ்சி காமகோடி சங்கரா மருத்துவமனைரத்தூரா, ருத்ரபிரயாக் மாவட்டம், உத்தரகண்ட் ரத்துரா சமூக மருத்துவமனையின் மறுதொடக்க விழாவிற்கு அறங்காவலர்கள் உங்களை அன்போடு அழைக்கிறார்கள்.
1987-ல் நிறுவப்பட்ட இம்மருத்துவமனை, ஆண்டுக்கு 10,000-15,000 நோயாளிகளுக்கு மலிவான/இலவசச் சிகிச்சை அளித்து வந்தது. நிதி, பணியாளர்கள் தட்டுப்பாடு மற்றும் கோவிட்-19 காரணமாக இதன் சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
'ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா அறக்கட்டளை' மூலம் 2022 முதல் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு, நவீன உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் மருத்துவமனை மீண்டும் முழுத் தயார்நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள்27-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அருகிலேயே அவசர மற்றும் பொது மருத்துவச் சிகிச்சை. புனித யாத்திரிகர்கள்உயரமான பகுதிகளில் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு உடனடி முதலுதவி மற்றும் மேல்சிகிச்சை வழிகாட்டல். சமூக நலன்கிராமப்புற மருத்துவ முகாம்கள், நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகள் ஆகிய சேவைகள் இடம் பெறும்.
மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தி, தொலைமருத்துவம் (Telemedicine) மற்றும் நவீன ஆய்வக வசதிகளுடன் இமயமலைப் பகுதிக்கான ஒருங்கிணைந்த சுகாதார மையமாக இதை உயர்த்துவதே முதன்மை இலக்காகும். இச்சேவை இடையறாது தொடர ஆதரவளிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்:
ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா அறக்கட்டளை
முகவரி: ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கரா மருத்துவமனை, ரத்தூரா, ருத்ரபிரயாக் மாவட்டம், உத்தரகண்ட்.
தொடர்பு எண்: 99726 11341
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எம். வி. தியாகராஜன்
