தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/போபால் தமிழ்ச்சங்கம்

போபால் தமிழ்ச்சங்கம்

போபால் தமிழ்ச்சங்கம்


செப் 12, 2026

Follow on GoogleFavourite on Google

செப் 12, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

போபால் தமிழ்ச் சங்கம் - தமிழக அரசு உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை சங்கத்தில் பதிவுப்பெற்ற அமைப்பு. போபால் தமிழ்ச் சங்கம் 2013 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த குடியில்பிறந்த பெருமையுடைய தமிழ் மக்கள். தமிழ் வளம் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கில் போபால் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.


போபாலில் வாழும் தமிழர்கள், அரசின் ஊழியர்கள், அதிகாரிகள், வணிகம் செய்வோர் மற்றும் தனியார் ஊழியர்கள் என 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் போபாலில் வாழ்கிறார்கள். அமைதியான, கலாச்சார ரீதியாக வளமான சமூகத்தின் உணர்வை அடைவதில் எங்களின் இலக்கை அடைய உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.


போபால் தமிழ்ச் சங்கத்திற்கு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் அனுப்பப்பட்ட கிராமிய கலைக்குழு நடத்திய கரகாட்டம், பாரத நாட்டியம் மற்றும் கிராமிய கலைஆடிய ஆட்டம் மக்களை ஈர்க்கும் சக்தி வாய்ந்தது என்பதை அறிய முடிந்தது மற்றும் போபால் தமிழ் சங்கத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார்கள்.


மத்திய பிரதேசம் அமைச்சர் விஸ்வாஸ் சாரங் மற்றும் பல்வேறு ஆட்சியாளர்கள் இருமாநிலங்களுக்கான அமைச்சர்களும் போபால் தமிழ்ச் சங்கத்தின் கலைநிகழ்ச்சி விழாவில்கலந்து கொண்டது பெரு நிகழ்வாகும் அவர்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்ற சங்கமாக போபால் தமிழ்ச் சங்கம் எழுந்து நிற்கிறது.


இந்த அமைப்பின் நலனுக்காக சுயநலம் பாராமல் உழைத்த அனைவரையும் நாங்கள் நெஞ்சாற நினைத்து ஒவ்வொருவருக்கும் நன்றிகள் தெரிவித்துக் கொள்கின்றோம்.


போபால் தமிழ்ச் சங்கம்என்பது போபால் முழுவதிலும் தொடங்கப்பட்ட முதல் தமிழ்ச்சங்கம். போபால் தமிழ்ச்சங்கம் மதச்சார்பற்ற சங்கம், போபாலில் வாழும் தமிழ் இன மக்களின் கலாச்சாரம், கலை மற்றும் இலக்கியத்தை மேம்படுத்துவதற்காக உள்ளது.


போபால் தமிழ்ச் சங்கம் கலாச்சார மற்றும் சமூக ஒருங்கிணைப்பை தீவிரமாக ஆதரிக்கிறது. அதே நேரத்தில், நம் குழந்தைகள் தமிழ் மொழி மற்றும்கலாச்சாரத்தின் செழுமையான பாரம்பரியத்தை புரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும், பாதுகாக்கவும் வேண்டும் என்று சங்கம் வலியுறுத்துகிறது, மேலும் இந்த நோக்கத்திற்காக, பல்வேறு கலாச்சார மற்றும் சமூக செயல்பாடுகள் மூலம் சங்கம் இதை அடைய கடுமையாக பாடுபடுகிறது.


போபால் மத்திய பிரதேசத்தில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கவும், தமிழர்களுக்கான கலாச்சார அடையாளத்தை உருவாக்கவும், செம்மொழியான செம்மொழியான தமிழ் மொழியை மேம்படுத்தவும், சமூக வலைப்பின்னல் மற்றும் தொடர்புகளை எளிதாக்கவும் போபால் தமிழ்ச்சங்கம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us