/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
விநாயகர் சதுர்த்தி விழா; நாடகம், நடன நிகழ்ச்சி
/
விநாயகர் சதுர்த்தி விழா; நாடகம், நடன நிகழ்ச்சி
ஆக 25, 2025

புதுடில்லி: கிழக்கு டில்லி மயூர் விகார் 1 பகுதியில் உள்ள சுபசித்த விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
உற்சவத்தின் இரண்டாம் நாள்காலை அபிஷேகம் லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. மாலை குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விநாயகரின் பூலோக விஜயம்
முதலாவதாக வானம்பாடி குழுவின் நிறுவனர் ருக்மணி மகாலிங்கத்தின் வழிகாட்டுதலில் குழந்தைகள் ஜே.கிருத்திக், ஆர்.கிருத்திக், தான்யா ஆகியோர் பங்கேற்ற
' விநாயகரின் பூலோக விஜயம் ' என்ற தலைப்பில் நகைச்சுவை நாடகம் நடைபெற்றது. இன்றைய நிகழ்வுகளை நாரதரும் ,விநாயகரும் கேள்வியாய் கேட்க மூஞ்சூறு பதில் சொல்லும் விதமாக கொண்டு சென்றார்கள். பன்மொழி கலவையில் உரையாடல் பார்வையாளர்களை கவர்ந்தது.
அடுத்து ஆவர்த்தனம் நடனபள்ளியைச்சேர்ந்த மாணவிகள் பங்கேற்ற ஆனந்த மங்களம் என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய புஷ்பாஞ்சலியுடன் தொடங்கி, அடுத்து தேவியை ஆராதனை செய்து இறுதியில் கணேச பஞ்சரத்னத்துடன் நிறைவு செய்தார்கள். நடன கோர்வைகளை குரு ராதிகா சென்குப்தா செவ்வனே வடிவமைத்திருந்தார்.
முன்னதாக கோவில் கமிட்டி உறுப்பினர் குரு சரண் வரவேற்று நிகழ்வுகளை தொடங்கிவைத்தார். நடன விளக்கங்களை குரு ராதிகா சென்குப்தா அறிவித்தது பார்வையாளர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது.நிறைவில் பங்கேற்ற குழந்தைகள் கோவில் சார்பில் கெளரவிக்கப்பட்டனர்.
மகா தீபாராதனை பிரகார ஊர்வலத்தை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
--- நமது செய்தியாளர், மீனா வெங்கி.