தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்


செப் 06, 2026

Follow on GoogleFavourite on Google

செப் 06, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி :​ துவாரகாவில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் மந்திரில் ஜன்மாஷ்டமி/ஸ்ரீ ஜெயந்தி பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காலையில் மூலவரான ஸ்ரீ வேணுகோபாலசுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், திருமஞ்சனப் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் (திருமஞ்சனம்) வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி பூக்களாலும் பொங்கலாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.


​சஹஸ்ரநாம அர்ச்சனை: அபிஷேகத்தைத் தொடர்ந்து, இறைவனின் திருநாமங்களைப் போற்றும் விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனை பக்தி சிரத்தையுடன் செய்யப்பட்டது. ​மாலையில் திரளான பக்தர்கள் ஒன்றாகக் கூடி, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு பாராயணம் செய்தனர். பாராயணத்தைத் தொடர்ந்து, பகவானின் புகழ்பாடும் சிறிய பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக, ஸ்வாமிக்கு தூப தீப ஆராதனைகளுடன் மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பு அவல் பிரசாதம் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.



- நமது செய்தியாளர் எம். வி. தியாகராஜன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us