
தலைநகர் தில்லியில் கடும் குளிர் ஒருபுறம் இருந்தாலும் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.நடைபெறும் மார்கழியில் ஐயப்ப பஜனைகள் நாற்திசையிலும் அமர்க்களமாக நடைபெறுகிறது.அதனிடையே சங்கீத நாட்டிய நிகழ்ச்சிகள் நமக்கு கலை விருந்து அளித்தது வருகின்றன.அந்த வகையில் சமீபத்தில் கலாவதி ஆர்ட்ஸ் என்ற அமைப்பு சூர்- தாள சங்கமம் என்ற தலைப்பில் தங்களது இரண்டாவது கலைநிகழ்ச்சியை டிசம்பர் 27 ம் தேதி கமானி ஆடிட்டோரியம் ஜான்கர் ஹாலில் நடத்தினார்கள்.
இசை ஆர்வல இளைஞர்கள் இணைந்து இந்த குழுமத்தை ஆரம்பித்து இரண்டாவது நிகழ்வை சிறப்பாக செய்தார்கள். இந்த அமைப்பில் கர்நாடக மற்றும் இந்துஸ்தானி கலைஞர்கள் இருப்பதால் நிகழ்ச்சிகளில் இரண்டையும் நமக்கு கேட்க கிடைக்கிறது.
அன்றைய தினம் முதலில் கர்நாடக இசை கலைஞர் டாக்டர் பொன்அவந்த் ராஜ் முதலில் பாடினார். அவருக்கு வயலினில் உமா அருண் மற்றும் மிருதங்கத்தில் விக்னேஷ் ஜெயராமன் உடன் வாசித்தனர்.
அடுத்தாற்போல் பூஷண் மோடியின் ஹிந்துஸ்தானி பாட்டு நிகழ்வு. தபலாவில் சச்சின் சங்கர், சம்பு சிசோடியா சாரங்கி, லலித் சிசோடியா ஹார்மோனியம் வாசித்தனர்.
மூன்றாவதாக கிராமிவரை பரிந்துரைக்கப்பட்ட புல்லாங்குழல் கலைஞர் பண்டிட் அஜய் பிரசன்னாவின் குழல் இசை தொடர்ந்தது. பல்ராம் சிஸ்ஸோடியா தபலா, திவ்யான்சு குமார் பக்கவாஜ் வாசித்து களைகட்ட வைத்தார்கள்.
இரண்டு வித சங்கீதங்கள் அவற்றின் நுணுக்கங்கள் அடுத்தடுத்து கேட்டு ரசிக்கவும் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.மேலும் இளைஞர்களின் இது போன்ற முயற்சிகளை பார்க்கும்போது நமது கலாசாரம் நல்ல முறையில் பாதுகாப்புடன் போற்றப்படுகின்றன ஒரு உள்ளார்ந்த மகிழ்ச்சி.
கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.அன்றைய நிகழ்வு சேம்பர் மியூசிக் கூட்டமாக இருந்தாலும் இளைஞர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்
- புதுடிலியிலிருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி
