/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா விநாயகர் கோவிலில் ஸ்ரீ விநாயக சதுர்த்தி ஐந்து நாள் விழா
/
நொய்டா விநாயகர் கோவிலில் ஸ்ரீ விநாயக சதுர்த்தி ஐந்து நாள் விழா
நொய்டா விநாயகர் கோவிலில் ஸ்ரீ விநாயக சதுர்த்தி ஐந்து நாள் விழா
நொய்டா விநாயகர் கோவிலில் ஸ்ரீ விநாயக சதுர்த்தி ஐந்து நாள் விழா
ஆக 29, 2025

நொய்டா செக்டர் 22 ல் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில், ஐந்து நாள் விழாவாக, ஸ்ரீ விநாயக சதுர்த்தி கொண்டாடப்பட்டது . நொய்டாவின் பழமையான இக்கோவிலின் பிரதிஷ்டா தினம் இணைந்து வந்ததால், அனைத்து நிகழ்ச்சிகளும், அதன் கோவில் வளாகத்திலேயே நடந்தன.
முதல் நாள் விழா வேத மந்திர கோஷங்களுக்கு மத்தியில், கணபதி ஹோமத்துடன் தொடங்கின, தவிர ஏகாதச ருத்ராபிஷேகம், மகா கணபதி ஹோமம் நடந்தன. மாலையில், விஎஸ்எஸ், நொய்டா குழுவினரின் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், தொடர்ந்து, சாய்கிருபா ராஜுவின், கர்நாடக இசை வழங்கினார். இதில் உமா அருண் வயலின் மற்றும் ஜி சுவாமிநாதன் மிருதங்கம், பக்க வாத்தியம் வாசித்தனர் .
இரண்டாவது நாளில், காலையில் கலச ஸ்தாபனம் , துர்கா ஹோமம், நவகிருஹ மற்றும் நக்ஷத்ர ஹோமம், மகா கணபதி மூல ஜப ஆகியவை நடந்தன. மாலையில், விஎஸ்எஸ் பஜன் மண்டலி நொய்டாவின் நாம சங்கீர்த்தனம் நடை பெற்றது.
மூன்றாவது நாளில், அபிஷேகம் அனைத்து சன்னதிகளுக்கும் நடந்தன. மாலையில், ஸ்கந்தன் புல்லாங்குழல் வாசித்தார் . பக்தர்கள் பக்தி பாடல்ககள் வழங்கினார்கள் .
நான்காவது நாளில், ஸ்ரீ விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, மஹா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், மகா கணபதி ஆகியவையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின . மாலையில் இளம் குழந்தைகள் ஜே கிரித்திக், மற்றும் ஆர் ஹிரிதிக் 'வேடிக்கை காவிய நகைச்சுவை' வழங்கினார்கள்.
இறுதி நாளில், காலை நிகழ்ச்சியில் மஹா கணபதி ஹோமம், அபிஷேகம், விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாலையில் ஸ்ரீ விநாயகரின் ஊர்வலம், அதைத் தொடர்ந்து வித்யாதி உற்சவம் நடந்தன. அனைத்து நாட்களிலும் மகா தீபாராதனை முடிந்தவுடன், மகா பிரசாதம் வழங்கப்பட்டது. ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஐந்து நாள் விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் விபூதி, வெள்ளி கவசம், ராஜ, சந்தனம், மற்றும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் அருள் பாலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரிது' ! தெய்வீக சக்தி உள்ள இந்த பிள்ளையாரை காண, 'வரம் கிடைக்கும்', என்ற நம்பிக்கையுடன் நொய்டா மட்டுமின்றி, சுற்றுப்புறத்தில் இருக்கும் பக்தர்கள் தரிசனத்திற்கு, அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு இடங்களிலிருந்து, நாற்பது வருடங்களாக இக்கோவிலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
செக்டார் 22 உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், திங்கட்கிழமை 29 ஆகஸ்ட் 2022 அன்று, பிரம்ம ஸ்ரீ வருண் ஷர்மா அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இக்கோவிலில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் (மூலவர்), தவிர, நவகிரகங்கள் மற்றும் ஸ்ரீ துர்க்கை ஆகிய விக்கிரஹங்கள் உள்ளன. விபிஎஸ் ஆஸ்தான வாத்தியார்கள் ஸ்ரீ சங்கர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீராம் ஆகியோர் தலைமையில், தினசரி பூஜைகள் மற்றும் ஹோமங்கள், கோவில் வாத்தியார்: ஸ்ரீ ஜெகதீசன் சிவாச்சாரியார் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
ஐந்து நாட்கள் நிகழ்வு 28 ஆகஸ்ட் இரவு முடிவடைந்தது. அதில் மூத்த உறுப்பினர்கள் வாத்தியார்கள், தன்னார்வலர்கள் அனைவரையும் கௌரவித்தனர். துணை தலைவர் வி விஸ்வநாதன் கோயில் சார்பாக நன்றியுரை வழங்கினார்.
இதே போல், செக்டர் 62 ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், அபிஷேகம், தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மாலையில் உற்சவ மூர்த்தி, மற்றும் விநாயகரை வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டது. ஸஹஸ்ரநாம அர்ச்சனை முடிந்தவுடன் மகா தீபாராதனை, பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் கொழுக்கட்டை பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது .
வி பி எஸ் நிர்வாகம், பல்வேறு சமய, ஆன்மீக, கலாச்சார நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தி வருகிறது. 'தியாகராஜ ஆராதனை', வாராந்திர பாராயணம், மகா சிவராத்திரி, ஸ்ரீ ராம நவமி, ஆவணி அவிட்டம், 'தை வெள்ளி', ஆடி வெள்ளி, ஆடி பூரம், புரட்டாசி மாத பஜனைகள், நவராத்திரி பண்டிகை, ஸ்ரீ அய்யப்ப பஜனை, தனுர் மாத பூஜை, ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி அன்று சிறப்பு அபிஷேகங்கள், பிரதோஷம், மனிதகுலத்தின் நலனுக்காக கோவில் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.
ஒத்த எண்ணம் கொண்டவர்களால் தொடங்கப்பட்டு, நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், இக்கோவிலை நிர்வகித்து வருகிறது. இந்த கோவில் கோபுரம், பிள்ளையாரை தரிசனம் செய்பவர்களுக்கு கோடி புண்ணியம்.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்