/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
தில்லியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
/
தில்லியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
நவ 17, 2025

தில்லி, மயூர் விஹார்-3, தமிழர் நலச் சங்கம் 16.12.25அன்று குழந்தைகள் தின விழா நிகழ்ச்சியை ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் தமிழ் பயிலரங்கில் சிறப்பாக நடத்தியது.
குழந்தைகள் நடனமாடியும், பாட்டுப் பாடியும், கதைகள் சொல்லியும், பேசியும், மாறுவேடமிந்தும், ஓவியங்கள் வரைந்தும் அசத்தினார்ள். நிகழ்ச்சியை ஆசிரியை அம்பிகா நீலகண்டன் தொகுத்து வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை தமிழர் நலச் சங்கத்தின் தலைவர் சிங்கத்துரை, செயலர் பாஸ்கரன், துணைத் தலைவர் கலியபெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கநாதன், சுந்தர் மற்றும் ஆசிரியர்கள் பாலசுப்பிமணியன், ரமேஷ், அம்பிகா நீலகண்டன் செவ்வனே செய்திருந்தார்கள். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு விழா இனிதே முடிந்தது.
- தில்லியிலிருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி
