அமெரிக்காவில் குளிர்கால புயல்: ஆயிரம் விமானங்கள் ரத்து
அமெரிக்காவில் குளிர்கால புயல்: ஆயிரம் விமானங்கள் ரத்து
ADDED : டிச 27, 2025 02:47 AM

நியூயார்க்: அமெரிக்காவில் குளிர்கால புயல் எச்சரிக்கையை தொடர்ந்து 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரம் முதலை் வடகிழக்கு நியூ ஜெர்சிவரையிலும், லோயர் ஹட்சன் பள்ளத்தாக்கு மற்றும் லாங் ஐலேண்ட், கனெக்டிகட்டின்சில பகுதிகள் வரையில் குளிர்கால புயல் எச்சரிக்கைவிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள பல விமான நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையை தாமதப்படுத்தி உள்ளது.
விமானங்களைக் கண்காணிக்கும் வலைத்தளமான FlightAware-இன் படி, 1,382 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 4,685 விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி விமான நிறுவனங்களிலேயே ஜெட் ப்ளூ ஏர்வேஸ் நிறுவனம் தான் அதிகபட்சமாக 225 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதற்கு அடுத்த படியாக டெல்டா ஏர்லைன்ஸ் 212, ரிபப்ளிக் ஏர்வேஸ் 157, அமெரிக்கன்ஏர்லைன்ஸ் 149, யுனைடெட் ஏர்லைன்ஸ் 97 விமானங்களையும் ரத்து செய்துள்ளது.
இவற்றில் பெரும்பாலனவை நியூயார்க் நகரத்தின் மூன்று முக்கிய விமான நிலையங்களான லாகார்டியா, ஜேஎப்கே, மற்றும் நியூவார்க் ஆகிய நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதே போன்று டெட்ராய்ட் மற்றும் பாஸ்டன் விமான நிலையங்களிலும் விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் போன்ற சூழ்நிலை காணப்பட்டது.
முன்னதாக எக்ஸ் வலை தளத்தில் புயல் குறித்து பயணிக்களுக்கு எச்சரிக்கைகளை பதிவி்ட்டு விமானங்கள் ரத்து குறித்தும் விமான நிறுவனங்கள் தெரிவித்து இருந்தது.

