வியட்நாமில் காற்று மாசை கட்டுப்படுத்த 'பைக்'களுக்கு தடை
வியட்நாமில் காற்று மாசை கட்டுப்படுத்த 'பைக்'களுக்கு தடை
ADDED : ஜூலை 15, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹானோய் : வியட்நாமில், காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பெட்ரோலில் இயங்கும் 'பைக்'களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிய நாடான வியட்நாமின் தலைநகர் ஹானோய், உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக உள்ளது. காற்று மாசை குறைப்பதற்காக, வியட்நாமும் பெட்ரோல் வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு மாற நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அடுத்தாண்டு ஜூலை முதல் ஹானோய் நகரில், பெட்ரோலில் இயங்கும் பைக்குகளுக்கும், ஒரு சில கார்களுக்கும் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

