ADDED : ஆக 24, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிரம்பை விமர்சித்தவர் வீட்டில் ரெய்டு
அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியா மீதான அவரின் வரி விதிப்பு கொள்கையை கடுமையாக விமர்சித்தார். 'ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார அழுத்தத்தை உருவாக்க இந்தியாவுக்கு டிரம்ப், 50 சதவீத வரி விதித்தது, அமெரிக்காவுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். டிரம்பின் செயல்கள் நம் நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகின்றன' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள், எப்.பி.ஐ., பறிமுதல் செய்த ஆதாரங்களை சேமித்து வை த்திருந்ததாக கூறி, ஜான் போல்டனின் வீடு மற்றும் அலுவலகங்களில் எப்.பி.ஐ., எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பினர் நேற்று முன்தினம் சோ தனையில் ஈடுபட்டனர்.