அமெரிக்காவில் சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் கோர விபத்து; 5 பேர் உடல் நசுங்கி பலி
அமெரிக்காவில் சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் கோர விபத்து; 5 பேர் உடல் நசுங்கி பலி
ADDED : ஆக 23, 2025 06:42 AM

நியுயார்க்: அமெரிக்காவில் சுற்றுலா பயணிகள் சென்ற பஸ், விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் பிரபல சுற்றுலா தலமான நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டு ரசித்து விட்டு, சுற்றுலா பயணிகள் ஒரு பஸ்சில் நியுயார்க் திரும்பிக் கொண்டு இருந்தனர். இந்த பஸ்சில் மொத்தம் 54 பேர் பயணித்துள்ளனர். பெரும்பாலோனார் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
பெம்பிரோக் என்ற நகரத்திற்கு அருகில் பஸ்சானது வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ், விபத்தில் சிக்கியது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மீட்புக்குழுவினர் கூறியதாவது;
சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போது சரக்கு லாரியுடன் மோதுவதை தவிர்க்க பஸ்சை திருப்பியபோது விபத்து நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதில் உண்மை இல்லை. விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகிறோம். 24க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.