ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உடனடி சீர்திருத்தம்: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உடனடி சீர்திருத்தம்: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
UPDATED : அக் 24, 2024 05:25 PM
ADDED : அக் 24, 2024 05:22 PM

கஜன்: ''ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும், '' என ரஷ்யாவின் கஜன் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
ஜெய்சங்கர் மேலும் பேசியதாவது: பழைய நடைமுறைகள் மாறி வருகிறது என்பதை பிரிக்ஸ் அமைப்பு எடுத்துக்காட்டுகிறது. அதேநேரத்தில் கடந்த காலத்தின் பல ஏற்றத்தாழ்வுகள் இன்னும் தொடர்கின்றன. உண்மையில் அவை புதிய வடிவங்களைப் பெற்றுள்ளன.
உலகமயமாக்கலின் பலன்கள் மிகவும் சீரற்றதாக உள்ளதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனுடன் கோவிட் பெருந்தொற்று மற்றும் பல மோதல்கள் உலகின் தெற்கு பகுதியை இன்னும் மோசமாக்கி உள்ளது. சுகாதாரம், உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு ஆகியன கவலைக்குரியதாக மாறி உள்ளது.
மிகவும் மோசமான உலகளாவிய ஒழுங்கை எவ்வாறு உருவாக்க வேண்டும்.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்த வேண்டும். இந்த அமைப்பை போலவே வளர்ச்சி வங்கிகளும் காலாவதியாகிவிட்டன. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

