இது தேவையில்லாத வேலை: அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யாவை சாடிய அதிபர் டிரம்ப்
இது தேவையில்லாத வேலை: அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யாவை சாடிய அதிபர் டிரம்ப்
ADDED : அக் 28, 2025 07:10 AM

வாஷிங்டன்: ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை தேவையில்லாதது. இதற்கு பதிலாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ரஷ்ய அதிபர் புடினை அதிபர் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் - இடையிலான போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து இருந்தார்.
இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: அவர்கள் எங்களுடன் மோதுவதில்லை. நாங்கள் அவர்களுடன் சண்டையிடுவதில்லை. நாங்கள் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறோம். புடினும் அணுசக்தி ஏவுகணை சோதனை நடத்துவது தேவையில்லாதது. இது பொருத்தமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
சொல்லப்போனால் அவர் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர், தற்போது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஏவுகணையை சோதிப்பதற்கு பதிலாக போரை புடின் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

