இந்தியா மீதான வரி ரஷ்யாவுக்கு மிகப்பெரிய அடி; சொல்கிறார் டிரம்ப்
இந்தியா மீதான வரி ரஷ்யாவுக்கு மிகப்பெரிய அடி; சொல்கிறார் டிரம்ப்
ADDED : ஆக 12, 2025 08:25 AM

வாஷிங்டன்: ''இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பு ரஷ்யாவிற்கு பெரிய அடியாகும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: ரஷ்யாவின் பொருளாதாரம் நன்றாக செயல்படவில்லை. அமெரிக்க வர்த்தக வரி விளைவால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக, இந்தியா மீதான அமெரிக்காவின் வரிகள் ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு மிக பெரிய அடியை ஏற்படுத்தி உள்ளது.
உலகளாவிய அழுத்தங்களின் ஒருங்கிணைந்த விளைவால் மிகவும் தொந்தரவு அடைந்துள்ளது. ரஷ்யா மீண்டும் தங்கள் நாட்டை கட்டியெழுப்பத் தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு மிகப்பெரிய நாடு. அவர்கள் சிறப்பாக செயல்பட ரஷ்யாவில் மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. அவர்கள் இப்போது சிறப்பாகச் செயல்படவில்லை. அவர்கள் மிகவும் தொந்தரவு அடைந்துள்ளனர். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.