ADDED : அக் 25, 2025 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: அமெரிக்காவில் வார விடுமுறை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
வடக்கு கரோலினாவின் தென்கிழக்கே உள்ள மேக்ஸ்டன் என்ற இடத்தில் வார விடுமுறை கொண்டாட்டம் நடந்தது. அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். 13 பேரை நோக்கி சுடப்பட்டது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்ததும் 150க்கும் மேற்பட்டோர் அஞ்கிருந்து தப்பிச் சென்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியது யார், அவர் கைது செய்யப்பட்டாரா, இறந்தவர்கள் யார் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

