'தன்னிறைவு, தற்காப்பு, தன்னம்பிக்கை இதுவே இந்தியாவை வழிநடத்துகிறது' ஐ.நா.வில் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
'தன்னிறைவு, தற்காப்பு, தன்னம்பிக்கை இதுவே இந்தியாவை வழிநடத்துகிறது' ஐ.நா.வில் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
ADDED : செப் 29, 2025 03:37 AM

நியூயார்க்: ''நவீ ன உலகில் இந்தியாவின் அணுகுமுறையை வழிநடத்தும் மூன்று முக்கிய விஷயங்களாக தன்னிறைவு, தற்காப்பு, தன்னம்பிக்கை ஆகியவை உள்ளன,'' என ஐ.நா., பொதுக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா.,வின் 80வது பொது சபை கூட்டத்தில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
நவீன உலகில் இந்தியாவின் அணுகுமுறையை வழிநடத்தும் மூன்று முக்கிய விஷயங்களாக தன்னிறைவு, தற்காப்பு, தன்னம்பிக்கை ஆகியவை உள்ளன.
எங்கள் நாட்டின் தி றன்களை வளர்க்க, வலிமையை உருவா க்க, திறமைகளை காக்க வேண்டும் என்பதே 'ஆத்மநிர்பர்' எனும் தன்னிறைவு திட்டம். இதன் விளைவுகளை உற்பத்தி, விண்வெளி, மருந்து துறை, டிஜிட்டல் பயன்பாடுகள் போன்றவற்றில் நாங்கள் ஏற்கனவே பார்த் துவிட்டோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை, எல்லைகளில் உறுதியான பாதுகாப்பு, வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு உதவி ஆகியவை இதில் அடங்கும்.
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகவும், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகவும், எங்கள் அடையாளம் குறித்து தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம்.
இந்தியா எப்போதும் தன் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு சுதந்திரமாக முடிவெடுக்கும். வளரும் நாடுகளின் குரலாக ஒலிக்கும்.
ஒவ்வொரு நாடும் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் பங்களிக்க வேண்டும். இந்தியா, போர்களை நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறது. அது தொடர்பான முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்போம்.
நாம் இன்று வரி குழப்பம் மற்றும் சந்தை அணுகலில் நிலையற்ற தன்மையை காண்கிறோம். இதன் காரணமாக குறிப்பிட்ட சந்தையை சார்ந்திருப்பது அல்லது வினியோக ஆதாரங்கள் குறைவாக இருப்பது போன்ற ஆபத்துக்களை குறைக்க வே ண்டிய தேவை எழுந்துள்ளது.
ஐ .நா., பாதுகாப்பு கவுன்சிலில் மறுசீரமைப்பு அவசியம். நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த வேண்டும். இந்தியா அதிக பொறுப்புகளை ஏற்கத் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

