பீஜிங்கில் ராமாயண நடன நாடகம்: அரங்கேற்றிய சீன கலைஞர்கள்
பீஜிங்கில் ராமாயண நடன நாடகம்: அரங்கேற்றிய சீன கலைஞர்கள்
ADDED : நவ 02, 2025 08:10 PM

பீஜிங்: சீனாவில் ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட நடன நாடகத்தை கலைஞர்கள் அரங்கேற்றினர்.
பிரபல சீன அறிஞர் மறைந்த பேராசிரியர் ஜி சியான்லின் எழுதிய ராமாயணத்தின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடன நாடகமான “ஆதி காவ்யா-முதல் கவிதை”யை சீன நடனக் கலைஞர்கள் குழு அரங்கேற்றியது.
இது குறித்து இந்திய துாதரகம் பதிவிட்டுள்ளதாவது:
சீன பரதநாட்டிய நிபுணர் ஜின் ஷான்ஷான் இயக்கிய இந்த நாடகம், 50க்கும் மேற்பட்ட திறமையான உள்ளூர் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண திரண்டு வந்த பார்வையாளர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.
இந்த நடன நாடகம் இரண்டாவது முறையாக நடத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்று நிகழ்ச்சி முதன் முதலில் கடந்த ஜனவரி-2025 ல் ஷூனி கிராண்ட் தியேட்டரில் நடைபெற்றது.
இவ்வாறு இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.

