தென் அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.5ஆக பதிவு
தென் அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.5ஆக பதிவு
ADDED : ஆக 22, 2025 08:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தென் அமெரிக்காவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ளது.
தென் அமெரிக்காவுக்கும், அண்டார்டிகாவுக்கும் இடையே உள்ள டிரேக் பாசேஜ் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 10.8 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
முதலில் ரிக்டர் அளவுகோலில் 8 என்ற அளவில் மதிப்பிடப்பட்ட இந்த நிலநடுக்கம் பிறகு, 7.5 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரையில் எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.