ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அதிபர் புடின் பங்கேற்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அதிபர் புடின் பங்கேற்பு
ADDED : ஆக 23, 2025 01:19 AM

பீஜிங்: சீனாவில் நடக்கவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட 20 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதை சீனா உறுதி செய்துள்ளது.
நம் எல்லை பகுதிகளை, சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அது தொடர்பாக இருநாட்டு உறவும் பாதிக்கப்பட்டது. கடந்த 2020ல் ஜம்மு - காஷ்மீரின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்கு பின் அது மிகவும் மோசமடைந்தது.
இது தொடர்பான பேச்சில், எல்லையில் இரு நாட்டு வீரர்களும் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதனால், இந்தியா - சீனா இடையிலான உறவு மீண்டும் வலுப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உள்ளது. இந்த கூட்டமைப்பின் நடப்பாண்டு மாநாடு, சீனாவின் தியன்ஜின் நகரில் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
சீன அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட உலக நாடுகளின் 20 தலைவர்கள் பங்கேற்பர் என சீனா தெரிவித்து உள்ளது.
இது குறித்து, அந்நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் லியு பின் நேற்று கூறியதாவது:
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், துருக்கி அதிபர் எர்டோகன், இந்தோனேஷிய அதிபர் பி ரபொவா சுமியண்டோ, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், வியட்னா ம் பிரதமர் பஹம் மின் ஷினா, பாகிஸ்தான் பிர தமர் ஷபாஸ் ஷெரீப், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் பொதுச் செயலர் நுா ர்லன் யெர்மெக்பாயேவ் உட்பட 10 சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகள், இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டை தொடர்ந்து, ஜப்பானிய ஆக்கிரமிப்பு மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போருக்கு எதிராக சீனா வெற்றி பெற்றதை குறிக்கும் 80வது ஆண்டு விழாவில் நடக்கும் ராணுவ அணிவகுப்பை உலக தலைவர்கள் பார்வையிட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.