ADDED : ஜூலை 24, 2025 10:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன்: பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி , அந்நாட்டு மன்னர் சார்லசை சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார்.அப்போது இரு நாடுகளுக்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். மோடியை சார்லஸ் வரவேற்றார். அப்போது, மரக்கன்று ஒன்றை சார்லசுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.
சுற்றுச்சூழலை ஊக்குவிக்க பிரதமர் துவக்கி வைத்த “Ek Ped Maa Ke Naam” திட்டத்தில் மன்னர் ஈர்க்கப்பட்டார் என அரச குடும்பம் தெரிவித்துள்ளது.