இந்தியாவுக்கு சலுகை வழங்க நியூசிலாந்தில் எதிர்ப்பு
இந்தியாவுக்கு சலுகை வழங்க நியூசிலாந்தில் எதிர்ப்பு
ADDED : டிச 24, 2025 03:46 AM

புதுடில்லி: இந்தியா - -நியூசிலாந்து நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுவதாகக்கூறி நியூசிலாந்தில் அரசியல் எதிர்க்குரல்கள் எழுந்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தால் இறக்குமதி வரிக்குறைப்பு, தொழிலாளர் விதிகளில் சீர்திருத்தங்கள், பணி விசா விரிவாக்கம், இந்திய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்க உள்ளன.
இவற்றை நியூசிலாந்தின் ஆளும் கட்சியான தேசிய கட்சியின் கூட்டணியில் உள்ள 'நியூசிலாந்து பர்ஸ்ட்' கடுமையாக எதிர்த்துள்ளது. அந்நாட்டு பார்லி.,யில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களிக்கப்போவதாகக் கூறியிருக்கிறது.
அக்கட்சித் தலைவரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், ' குடியேற்ற விதிகளால் நியூசிலாந்து மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
பால் பொருள் வர்த்தகத்துக்கு சாதகமான அம்சங்கள் இல்லை. அதேபோல இந்தியர்களுக்கு குடியேற்ற உரிமை தாராளமாக உள்ளது. ஆனால் நியூசிலாந்தின் வேலைச்சந்தை குறுகிவிட்டது.
இந்திய மாணவர்களுக்கு சலுகைகள் அளிப்பதால் நியூசிலாந்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு நெருக்கடி ஏற்படும்' என்று கூறியுள்ளார்.
யாருக்கு - என்ன சலுகை?
இந்தியாவைச் சேர்ந்த அறிவியல், தொழில்நுட்பம், பொறி யியல், கணித பட்டதாரிகளுக்கு- படிப்பு முடிந்தபிறகு 3 ஆண்டுகளுக்கு பணி விசா
முனைவர் ஆய்வாளர்களுக்கு - 4 ஆண்டுகள்வரை பணிபுரிய விசா

