ஏழு ஆண்டுகளுக்கு பின் சீனா சென்ற மோடி ஷாங்காய் மாநாட்டில் இன்று பங்கேற்கிறார்
ஏழு ஆண்டுகளுக்கு பின் சீனா சென்ற மோடி ஷாங்காய் மாநாட்டில் இன்று பங்கேற்கிறார்
ADDED : ஆக 31, 2025 02:24 AM

பீஜிங்: ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஏழு ஆண்டுகளுக்கு பின் நேற்று சீனா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் - சீனா புறப்பட்ட பிரதமர் மோடி, ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார். அங்கு, நேற்று முன்தினம் நடந்த இந்திய - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின், அந்நாட்டு முன்னாள் பிரதமர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
ஒத்துழைப்பு இதையடுத்து, இரண்டாவது நாளான நேற்று, ஜப்பானின் 16 மாகாண கவர்னர்களை டோக்கியோவில் சந்தித்து பிரதமர் மோடி பேசினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர்களிடம் வலியுறுத்தினார்.
பின், டோக்கியோவில் இருந்து 370 கி.மீ., துாரத்தில் உள்ள சென்டாய் நகருக்கு புல்லட் ரயிலில் மோடி பயணித்தார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
அங்குள்ள உலகின் புகழ்பெற்ற புல்லட் ரயில் தொழிற்சாலை மற்றும் பயிற்சி மையத்தை மோடி பார்வையிட்டார். அங்கு பயிற்சி பெற்று வரும் இந்தியர்களை சந்தித்து பேசினார். பின், டோக்கியோ வந்த பிரதமர் அங்குள்ள செமி கண்டக்டர் தொழிற்சாலையை பார்வையிட்டார்.
இது குறித்து தன் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி, 'டோக்கியோ செமி கண்டக்டர் தொழிற்சாலைக்கு ஜப்பான் பிரதமருடன் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
செமி கண்டக்டர் துறை, இந்திய - ஜப்பான் உறவில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த துறையில் இந்தியா பல முன்னேற்றங்களை செய்துள்ளது. ஏராளமான இளைஞர்கள் இந்த துறையில் இணைந்துள்ளனர். வரும் காலங்களில் இந்த உந்துதலை தொடர நாங்கள் முயல்கிறோம்' என, குறிப்பிட்டுள்ளார்.
தாக்கம் சீனா புறப்படுவதற்கு முன் ஜப்பான் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, 'உலகப் பொருளாதாரத்தில் தற்போது நிலவும் நிலையற்ற தன்மையை வலுப்படுத்த, இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்படுவது முக்கியம்.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, உலகளாவிய அமைதி மற்றும் செழிப்பில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்' என்றார்.
'இதையடுத்து, பிரதமர் மோடி சீனா புறப்பட்டு சென்றார். ஏழு ஆண்டுகளுக்கு பின், அந்நாட்டிற்கு சென்ற பிரதமருக்கு, தியான்ஜின் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின், அங்குள்ள ஹோட்டலுக்கு சென்ற பிரதமரை வரவேற்கும் விதமாக, இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சீன கலைஞர்கள்