போரில் பயன்படுத்தப்பட்டதாக விளம்பரம் செய்து விற்பனை; இஸ்ரேல் ஆயுத ஏற்றுமதி விர்ர்...
போரில் பயன்படுத்தப்பட்டதாக விளம்பரம் செய்து விற்பனை; இஸ்ரேல் ஆயுத ஏற்றுமதி விர்ர்...
ADDED : டிச 24, 2025 06:40 AM

டெல் அவிவ்: இஸ்ரேலின் ஆயுத விற்பனை, இதுவரை இல்லாத அளவாக கடந்தாண்டில், ஒரு லட்சத்து 31,000 கோடி ரூபாயை எட்டி சாதனைப் படைத்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல், உலகின் முதல் 10 ஆயுத ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இஸ்ரேலின் 'அயர்ன் டோம்', பல அடுக்கு பாதுகாப்பைக் கொண்ட உலகின் மிகச்சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாகும். மேலும் முன்னணி தொழில்நுட்பத்தில் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் உட்பட ஏராளமான ஆயுதங்களையும் உற்பத்தி செய்து வருகிறது.
இதன் காரணமாகவே காசா,லெபனான், ஈரான் உட்பட பல முனை தாக்குதல்களை, இஸ்ரேல் சமாளிக்க முடிந்தது. இந்த நிலையில், இஸ்ரேலின் ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி, கடந்தாண்டில் உச்சத்தை எட்டியிருப்பதாக அந்நாட்டு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டில் இஸ்ரேலின் ஆயுத விற்பனை ஏற்றுமதி முந்தைய ஆண்டைவிட 13 சதவீதம் உயர்ந்து, ஒரு லட்சத்து 31,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளே அதிகளவில் வாங்கியுள்ளன.
காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை விளம்பரப்படுத்தி, இஸ்ரேல் ஆயுத நிறுவனங்கள் வருவாயை ஈட்டி இருப்பதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.

