அயர்லாந்தில் சிறுவர்களால் இனவெறி தாக்குதலுக்கு ஆளான இந்திய குடும்பம்
அயர்லாந்தில் சிறுவர்களால் இனவெறி தாக்குதலுக்கு ஆளான இந்திய குடும்பம்
ADDED : ஆக 10, 2025 12:49 PM

டப்ளின்: அயர்லாந்தில் பஸ் நிறுத்தத்தில் தனது 60 வயது தந்தையை இரண்டு சிறுவர்கள் இனரீதியான துன்புறுத்தல் மற்றும் தகாத நடத்தைக்கு ஆளாக்கியதாக இந்திய வம்சாவளி பெண் ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.
அயர்லாந்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல் அடிக்கடி, நிகழ்ந்து வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு டாக்ஸி டிரைவரும், ஆறு வயது சிறுமியும் தாக்கப்பட்டனர்.நாடு முழுவதும் உடல் ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இந்தியர்கள் விழிப்புடன் இருக்குமாறு அயர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியர்கள் மீதான தாக்குதல்களுக்கு மத்தியில், டப்ளினில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் தனது 60 வயது தந்தையை இரண்டு சிறுவர்கள் இனரீதியான துன்புறுத்தல் செய்ததாக இந்திய வம்சாவளி பெண் போலீசில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து, இந்திய வம்சாவளி பெண் கூறியதாவது:
60 வயதான என் தந்தையை6 மற்றும் 7 வயதான சிறுவர்களால் துன்புறுத்தப்பட்டார், இதனால் நாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்தோம். முதலில் சிறுவர்கள் எனது தந்தையுடன் செல்பி எடுக்கக் கேட்டனர், பின்னர் அவரை கேலி செய்யத் தொடங்கினர்.
அவர்களில் ஒரு சிறுவன், தந்தையின் பாக்கெட்டிலிருந்து தனது பணப்பையை எடுக்க முயன்றார்.நாங்கள் அமைதியாக இருக்க முயற்சித்தோம், அவர்களின் நடத்தையைப் புறக்கணித்தோம். ஆனால், அதிர்ச்சியூட்டும் விதமாக, ஒரு சிறுவன் என் தந்தையை தொடர்ந்து தாக்கினார். தவறான நடத்தைக்கு குழந்தைகள் பொறுப்பேற்கக்கூடிய வகையில் சட்டங்கள் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.