மெக்சிகோவில் கேஸ் டேங்கர் லாரி வெடித்து விபத்து: 3 பேர் பலி;70 பேர் காயம்
மெக்சிகோவில் கேஸ் டேங்கர் லாரி வெடித்து விபத்து: 3 பேர் பலி;70 பேர் காயம்
ADDED : செப் 11, 2025 07:31 AM

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் முக்கிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்து கேஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 3 பேர் பலியானார்கள் மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மெக்சிகோ நகர நெடுஞ்சாலையில் ஒரு எரிவாயு டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது. இதனால் தலைநகரின் தெற்கே தீப்பிழம்புகள் மற்றும் புகை கிளம்பி 70 பேர் காயமடைந்தனர். சிலர் உடல் முழுவதும் கருகி, மற்றவர்கள் சாலையின் நடுவில் தீக்காயங்கள் மற்றும் கிழிந்த ஆடைகளுடன்
உதவிக்காகக் காத்திருந்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அவசர குழுக்கள் விரைந்தன. சம்பவ இடத்தை மெக்சிகோசிட்டி மேயர் கிளாரா ப்ருகாடா ஆய்வு செய்தார்.
இந்த விபத்து குறித்து கிளாரா ப்ருகாடா கூறியதாவது:
நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் ஏற்பட்ட எரிவாயு டேங்கர் லாரி விபத்து காரணமாக அவசர நிலை ஏற்பட்டது. இது 18 வாகனங்களை எரித்தது, 3 பேர் உயரிழந்தனர்.காயமடைந்தவர்களில் 19 பேர் ஆபத்தான நிலையில் இருந்தனர். என்றும், காயமடைந்தவர்கள் நகரம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். சாலை பல மணி நேரம் முடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் சாலை திறக்கப்பட்டது.
இவ்வாறு கிளாரா ப்ருகாடா கூறினார்.