தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/வெளிநாட்டு ஊழியர்கள் வேலைவாய்ப்பு பாதிக்கும் அபாயம்: பணி அனுமதி நீட்டிப்பை அமெரிக்கா ரத்து செய்தது

வெளிநாட்டு ஊழியர்கள் வேலைவாய்ப்பு பாதிக்கும் அபாயம்: பணி அனுமதி நீட்டிப்பை அமெரிக்கா ரத்து செய்தது

வெளிநாட்டு ஊழியர்கள் வேலைவாய்ப்பு பாதிக்கும் அபாயம்: பணி அனுமதி நீட்டிப்பை அமெரிக்கா ரத்து செய்தது

5


UPDATED : அக் 14, 2026 10:04 PM

ADDED : அக் 14, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

5

UPDATED : அக் 14, 2026 10:04 PM ADDED : அக் 14, 2026 10:03 PM


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேறியவர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை வாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய முடிவை அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர், எச்1பி விசாவில் வருபவரின் கணவர் அல்லது மனைவி, அடைக்கலம் கேட்டு வருவோருக்கு, தற்காலிகமாக வேலை செய்ய, பணி அனுமதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதற்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் காலம், 540 நாட்களாக இருந்தது. அதன்பிறகும் அனுமதி வழங்காவிட்டால், தானாகவே அனுமதி வழங்கியதாக கருதப்படும்.

இந்த நடைமுறை முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் போது, வெளிநாட்டினர் வேலை இழப்பதை தவிர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டது.

தற்போது புதிய விதியின்படி, பணி அனுமதிக்கான ஆவணங்கள் அதிகாரப்பூர்வமாக கையில் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து வேலை செய்ய முடியாது.

கடந்த ஆண்டில், தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட இந்த மாற்றம், தற்போது பெறப்பட்ட பொதுமக்களின் கருத்துகளுக்குப் பின் இறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் 30க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட புதுப்பிப்பு விண்ணப்பங்களுக்கு இந்த விதி பொருந்தும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us