இந்தோனேஷியா முதியோர் இல்லத்தில் தீ :16 பேர் உடல் கருகி பலி
இந்தோனேஷியா முதியோர் இல்லத்தில் தீ :16 பேர் உடல் கருகி பலி
ADDED : டிச 30, 2025 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் முதியோர்: இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் சுலவேசி தீவின் மனாடோ நகரில் உள்ள வெர்தா டமை முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், அங்கு தங்கியிருந்த 16 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்; 12 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே நேரம், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

