ADDED : ஜூலை 24, 2025 09:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: பிபரல அமெரிக்க மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன், 71 மாரடைப்பால் காலமானார்.
இவரது இயற்பெயர் டெர்ரி ஜீன் போல்லியா. 1980-களில் டபிள், டபிள், இ. எனப்படும் பொழுது போக்கு விளையாட்டு அமைப்பில் இளம் வீரராக களம் இறங்கி 90 கள் வரை மல்யுத்த உலகில் சூப்பர் ஸ்டாராக புகழ்பெற்று விளங்கினார்.
. கடந்த 2012ம் ஆண்டு மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற பின் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார். புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார்.
இவரது மறைவுக்கு சக மல்யுத்தவீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.