பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் பலி
பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் பலி
ADDED : அக் 19, 2025 12:38 AM

காபூல்: ஆப்கானிஸ்தானில், பாக்., நடத்திய வான்வழி தாக்குதலில், அந்நாட்டைச் சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், தலிபான்கள் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் கடந்த சில நாட்களாக எல்லையில் மோதல் நடக்கிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு மாகாணமான பாக்டிகாவில் உள்ள உர்குன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில், மூன்று ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
இதில் உயிரிழந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கதுல்லா மற்றும் ஹாரூன் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.
இவ்வீரர்கள் உள்ளுர் போட்டிகளில் பங்கேற்று உர்குன் மாவட்டத்திற்கு திரும்பிய போது, தாக்குதலில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கடுமையாக கண்டித்துள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பாக்., இலங்கை, ஆப்கானிஸ்தான் இடையே அடுத்த மாதம் நடைபெற உள்ள முத்தரப்பு டி - 20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கன் அறிவித்துள்ளது.

