SIR என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி: நயினார் நாகேந்திரன் பேட்டி
SIR என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி: நயினார் நாகேந்திரன் பேட்டி
UPDATED : அக் 28, 2025 02:05 PM
ADDED : அக் 28, 2025 11:06 AM

கோவை: SIR என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை கண்டு திமுகவுக்கு பதற்றம் ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காகக் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து தமிழரை பிரதமர் மோடி துணை ஜனாதிபதி ஆக்கி உள்ளார். தமிழகத்தில் புயல் சின்னம் உருவாகியுள்ளது.
பாஜ சார்பில் மாவட்ட மாநில நிர்வாகிகள், புயல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உதவி புரியவும் தயார் நிலையில் இருக்கிறோம். பருவமழை தவறாமல் வந்துள்ளது. சார் என்றாலே திமுகவுக்கு அலர்ஜி. அண்ணா பல்கலை சம்பவத்தில் இருந்தே, சார் என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது திமுகவினர் சேர்த்துள்ள போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று அவர்களுக்கு பயம்.
கொளத்தூர் தொகுதியில் மட்டும் 9 ஆயிரம் ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது நீக்கல், சேர்த்தல் பட்டியலை தமிழக அரசு அதிகாரிகள் தான் செய்யப் போகிறார்கள் எதற்கு அஞ்சுகிறார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை கண்டு திமுகவுக்கு பதற்றம் ஏன்? தோல்வி பயத்தால் திமுக கூட்டணிக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

