வரிவிதிப்புகளை தவறாக பயன்படுத்துவதை எதிர்க்கிறோம்: சொல்கிறது சீனா
வரிவிதிப்புகளை தவறாக பயன்படுத்துவதை எதிர்க்கிறோம்: சொல்கிறது சீனா
ADDED : ஆக 08, 2025 02:32 PM

பீஜிங்: ''வரிவிதிப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு எங்களது எதிர்ப்பு நிலையானது மற்றும் தெளிவானது'' என்பதை சீனா உறுதிப்படுத்தி உள்ளது.
ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. சீனாவின் கருத்து என்ன?
''வரிவிதிப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு எங்களது எதிர்ப்பு நிலையானது மற்றும் தெளிவானது. வரிகளை துஷ்பிரயோகம் செய்வதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவிக்கிறோம்'' என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளை இரண்டு சீன நாட்டவர்கள் மீறியதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு துறை அமைச்சகத்தின் கருத்து என்ன?
இதற்கு, குவோ ஜியாகுன் அளித்த பதில்: தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக பிரச்னைகளை அமெரிக்கா அரசியலாக்குவதையும், அவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்தி தீங்கிழைக்க முயற்சிப்பதையும் சீனா எதிர்க்கிறது. சீன நாட்டினரின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை அமெரிக்கா தீவிரமாகப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.