பலூசிஸ்தானில் குழப்பம்: தனி நாடு கேட்டு ராணுவத்துடன் மோதும் போராளிகள்
பலூசிஸ்தானில் குழப்பம்: தனி நாடு கேட்டு ராணுவத்துடன் மோதும் போராளிகள்
ADDED : மே 09, 2025 03:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெரிய மாநிலமான பலுசிஸ்தானில், தனி நாடு கேட்டு அங்கு போராளிகள் பாகிஸ்தானுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலை பயன்படுத்தி, பலுசிஸ்தான் விடுதலை போராளிகள், பாக்., ராணுவத்துடன் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று நடந்த பலுசிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ அதிகாரி உட்பட 14 பேர் பலியானார்கள்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பலுசிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை பாகிஸ்தானுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

