sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தலையில் தழும்புடன் பொதுவெளியில் தோன்றிய பைடன்!

/

தலையில் தழும்புடன் பொதுவெளியில் தோன்றிய பைடன்!

தலையில் தழும்புடன் பொதுவெளியில் தோன்றிய பைடன்!

தலையில் தழும்புடன் பொதுவெளியில் தோன்றிய பைடன்!


ADDED : செப் 07, 2025 01:10 PM

Google News

ADDED : செப் 07, 2025 01:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: தலையில் தெரியும் பெரிய தழும்புடன் அமெரிக்க முன்னாள் அதிபர் பைடன் 82, மீண்டும் பொதுவெளியில் தோன்றிய காட்சிகள், சமூக ஊடகங்களில் வைரலானது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பைடன், ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் வேட்பாளராக முதலில் களம் இறங்கினார்; பின்னர் உடல் நிலையை காரணம் காட்டி, போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.இந்த ஆண்டின் தொடக்கத்தில், பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, அது, உடல் உறுப்புகளுக்கும் பரவி இருந்தது. மருத்துவர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது சிகிச்சை பற்றிய விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. எனினும் அவர் வெளியிடங்களில் நடமாட்டம் குறைந்து விட்டது. இந்நிலையில், தலையில் பெரிய தழும்புடன் மீண்டும் பொதுவெளியில் பைடன் தோன்றினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

சமூகவலைதளங்களில் வெளியான காட்சிகளில்,

பைடன், தன் சொந்த ஊரான டெலாவேரில் தொழிலாளர் தின வார இறுதியில் நலம் விரும்பிகளை வாழ்த்திக்கொண்டிருந்தார். ரெஹோபோத் கடற்கரையில் உள்ள ஒரு தேவாலயத்தை விட்டு வெளியேறும் வீடியோவும் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில் அவர் பலவீனமாக நடந்து செல்வது தெரிந்தது. தலையின் முன்புறம் தெரியும் காயம், அவரது வெள்ளை முடியால் ஒரளவு மறைக்கப்பட்டிருந்தது.

வீடியோவை படம்பிடித்த பிரெட் கார்கர் என்பவர் கூறுகையில், 'பைடனின் இந்த அடையாளம் கவனிக்கத்தக்கது. அவரது தோல் புற்றுநோய் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதன் பின் விளைவாக அந்த தழும்பு ஏற்பட்டிருக்கலாம்' என்றார்.

பைடனின் உதவியாளர்கள், அவர் சமீபத்தில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தினர், இது தோல் புற்றுநோய்க்கான சிகிச்சையாகும் என்று மேயோ கிளினிக் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us