பாக்.,குக்கு ஆதரவு தெரிவித்த அஜர்பைஜான் இந்திய சுற்றுலா பயணியரை இழந்தது
பாக்.,குக்கு ஆதரவு தெரிவித்த அஜர்பைஜான் இந்திய சுற்றுலா பயணியரை இழந்தது
ADDED : ஆக 25, 2025 12:25 AM

பாகு: இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால், அஜர்பைஜான் நாட்டை நம் சுற்றுலா பயணியர் ஆயிரக் கணக்கானோர் தவிர்த்துள்ள புள்ளிவிபரம் வெ ளியாகி உள்ளது.
ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆப்பரேஷன் சிந்துார்' எனும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியா மீது ட்ரோன்களை ஏவியது.
இந்த ட்ரோன்களை வழங்கியது மேற்காசிய நாடான துருக்கி என்பது தெரிந்தது.
இதையடுத்து துருக்கி செல்வதற்கு எதிராக இங்கு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் அந்நாட்டிற்கு மே மாதம் 31,000 சுற்றுலா பயணியர் சென்ற நிலையில், அது ஜூனில் 50 சதவீதம் சரிந்து 16,000 ஆக சரிந்தது.
இதே போல் ஐரோப்பிய நாடான அஜர்பைஜான், இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது.
இதனால், நம் சுற்றுலா பயணியர் ஆயிரக்கணக்கானோர் அஜர்பைஜான் செல்வதை தவிர்த்துள்ளனர். கடந்த 2024 ஜூனில் 28,000 இந்தியர்கள் அஜர்பைஜானுக்கு சுற்றுலா சென்றனர்.
இந்நிலையில், அந்நாடு பாகிஸ் தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், இந்திய சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் 28,000 ஆக இருந்த எண்ணிக்கை, தடாலடியாக இந்த ஆண்டு ஜூனி ல் 9,000 ஆகியுள்ளது.