ADDED : ஆக 14, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டப்ளின்:அயர்லாந்து பிரதமர் கண்டித்த நிலையிலும் இந்தியர் களுக்கு எதிரான தாக்குதல் தொடர்கிறது.
ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் தங்கி படித்து வரும் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் மீது, கடந்த சில வாரங்களில் மட்டும் ஐந்து இனவெறி தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த தாக்குதல் சம்பவத்தை, அயர்லாந்து பிரதமர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கண்டித்தார்.
இந்நிலையில், இந்திய மாணவர் ஒருவர் சமீபத்தில் டப்ளினின் பேர்வியூ பார்க் பகுதியில் சென்ற போது, இரு சிறுவர்கள் இணைந்து தாக்கியதாக கூறினார்.
இதில், அவரின் கண்ணில் காயம் ஏற்பட்ட து.