ADDED : டிச 21, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏதென்ஸ்: மத்திய தரைக்கடல் பகுதி வழியாக கிரீஸ் நாட்டிற்கு அகதிகளாக மீன்பிடி படகில் வந்த, 540 பேரை கடலோர காவல்படையினர் மீட்டனர்.
ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் தேடி, ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அப்படி செல்பவர்கள் ஆபத்தான முறையில் படகுகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில், காவ்டோஸிலிருந்து 30 கி.மீ., தொலைவில், கடலில் சந்தேகத்திற்குரிய வகையில் மீன்பிடி படகு ஒன்று இருந்தது. கிரீஸ் கடலோர காவல்படையினர் அதில் சோதனை நடத்தியபோது, 540 பேர் அகதிகளாக புகலிடம் தேடி வந்தது தெரிய வந்தது. அவர்களை மீட்டுள்ள அதிகாரிகள், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை துவக்கியுள்ளனர்.

