உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 16, 2026 06:18 AM

அ நிறம் | அளவு
சென்னை: பருவமழைக்கு முன்பே, சாலை பராமரிப்பு பணிகளை முடிக்க, நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த மாதம் இறுதியில் பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள், நெடுஞ்சாலைத் துறைக்கு கீழ் உள்ள அனைத்து சாலைகளிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது, மாநிலம் முழுதும் 500 சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதில், 200 சாலைகளில், 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள சாலை பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளன. எனவே, அனைத்து பணிகளையும் முடித்து, பருவ மழையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம். பணிகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க, தலைமை பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
