இரட்டை வேடத்தில் திருமா போல வருமா?: பெருமாள் கோயிலில் 'பக்தி பரவசத்துடன்' வழிபாடு
இரட்டை வேடத்தில் திருமா போல வருமா?: பெருமாள் கோயிலில் 'பக்தி பரவசத்துடன்' வழிபாடு
UPDATED : ஏப் 04, 2024 12:40 PM
ADDED : ஏப் 04, 2024 12:39 PM

அரியலூர்: ஹிந்து மதத்தை பற்றியும், ஹிந்து கடவுள்கள் பற்றியும் அடிக்கடி அவதூறாக பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேர்தல் வந்த உடன் அரியலூரில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தி பரவசத்துடன் வழிபாடு நடத்தியுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பலமுறை ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும்விதமாகவும், ஹிந்து மதத்துக்கு எதிராகவும் பேசி வருகிறார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வாய் திறப்பதில்லை. இதனால், திருமாவளவனின் ஹிந்து எதிர்ப்பு நிலைப்பாடு குறைந்தபாடில்லை. .
மேடைகளில் ஹிந்துக்கோயில்களை அவதூறாக பேசியும், ஹிந்து மதத்தை இழிவாக பேசியும் கூட்டத்திற்கு மத்தியில் முழங்கும் அவர், தனிப்பட்ட முறையில் கோயில் வழிபாடில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் வந்து விட்டால் இவருக்கு எங்கிருந்தோ ஹிந்து கடவுள்களின் நினைவு வந்து விடுகிறது. உடனே கோயில் கோயிலாக செல்கிறார்.

ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக தனது சொந்த கிராமமான அங்கனூரில் உள்ள குல தெய்வமான மாயவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டே வேட்புமனுத்தாக்கல் செய்தார் என்ற செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.


