தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை; கடலுாரில் அதிகம்!
தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை; கடலுாரில் அதிகம்!
ADDED : ஆக 02, 2025 11:22 AM

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கடலுார், மயிலாடுதுறை, அரியலுார், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடலுார் மாவட்டத்தில் கன மழை கொட்டியது. மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவு விபரம் பின்வருமாறு:
வானமாதேவி- 113 மி.மீ.,
கீழணை- 109.6
செம்பனார்கோவில் - 99.4 மி.மீ.,
உளுந்தூர்பேட்டை - 95 மி.மீ
ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் -88 மி.மீ.,
லால்பேட்டை-84 மி.மீ
செந்துறை- 83 மி.மீ
குடிதாங்கி- 80 மி.மீ.,
திருப்புவனம்- 79.2 மி.மீ
விழுப்புரம்-72 மி.மீ
குறிஞ்சிப்பாடி- 70 மி.மீ
கடலுார் கலெக்டர் அலுவலகம்- 69.9 மி.மீ.,
பண்ருட்டி- 68 மி.மீ
காட்டுமன்னார்கோவில்- 65 மி.மீ.,
மணல்மேடு- 64 மி.மீ.,
வேப்பூர்-51 மி.மீ.,
மஞ்சளாறு-49.4 மி.மீ
மயிலாடுதுறை-42.8 மி.மீ.,
சீர்காழி- 42.6 மி.மீ.,
பாபநாசம்-40 மி.மீ
திண்டிவனம்- 37 மி.மீ.,
திருமங்கலம்- 37.2 மி.மீ.,
விருதுநகர் (காரியாபட்டி)- 32.4 மி.மீ.,
செஞ்சி-30.5 மி.மீ