கள் விற்பனைக்கு ஏன் அனுமதிக்க கூடாது?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
கள் விற்பனைக்கு ஏன் அனுமதிக்க கூடாது?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : ஜூலை 22, 2024 12:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் மதுபானங்களை விற்க அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,
தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது?' என தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்கவும் உத்தரவிட்டார். இவை தொடர்பாக ஜூலை 29ல் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

