அடித்து துவைக்கும் வாஷிங்மெஷின்! சந்தையில் இதெல்லாம் புதுசுதான்!
அடித்து துவைக்கும் வாஷிங்மெஷின்! சந்தையில் இதெல்லாம் புதுசுதான்!
ADDED : அக் 24, 2024 10:11 PM
எல்.ஜி., விற்பனைப்பிரிவு மேலாளர் பெரோஸ் அகமது கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை ஒட்டி, எல்.ஜி., நிறுவனத்தில், ஓ.எல்.இ.டி., ஜி4, 'டிவி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சினிமா தியேட்டரில் இல்லாத தொழில்நுட்ப வசதிகளும், இதில் இடம் பெற்றுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு இதன் சாப்ட்வேர் அப்டேட் செய்து கொள்ளலாம். இது, 55 இன்ச் முதல் 87 இன்ச் வரை விற்பனை கிடைக்கிறது. ஆரம்ப விலை, 1.20 லட்சம் ரூபாய்.
இதேபோல, 617 லிட்டர் கொள்ளளவு கொண்ட, மூட் அப் பிரிஜ்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. வழக்கமாக, பிரிஜ்ஜின் முன்பக்க கதவின் வண்ணத்தை மாற்ற முடியாது.
ஆனால், இதில் திரைபோன்ற வசதி உள்ளதால், பிரிஜ் கதவின் வண்ணத்தை இஷ்டம்போல் மாற்றிக்கொள்ள முடியும். இதை பிரிஜ் ஆக மட்டுமின்றி, பிரீசராகவும் மாற்றிக் கொள்ள முடியும்.
இதில் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளதால், அதில் ஒளிக்கும் பாடலுக்கு ஏற்ப, கதவின் நிறம் மாறும். பிரிஜ்ஜை பயன்படுத்த கதவை முழுமையாக திறக்க வேண்டியது இல்லை. ஏதாவது ஒருபகுதியை திறந்து பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.
இது, 7 கிலோ கொள்ளளவு கொண்ட பிரிஜ், 45,000 ரூபாய்க்கு கிடைக்கிறது.
இதேபோல, பூஸ்டர் சீரிஸ் வகையை சேர்ந்த வாஷிங்மெஷின் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதில், கையால் செய்வதுபோல அடித்து துணிதுவைப்பது, கசக்குவது உள்ளிட்ட ஆறு வகையான வசதிகள் உள்ளது. ஆறு ஆண்டுகள் வாரன்டி வழங்கப்படுகிறது.
தீபாவளிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மூன்று பொருட்களையும், உலகின் எந்த மூலையில் இருந்தும், 'வை-பை' வாயிலாக கன்ட்ரோல் செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

