மீண்டும் அங்கீகாரம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் ஆசை: துரை வைகோ
மீண்டும் அங்கீகாரம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் ஆசை: துரை வைகோ
ADDED : ஜூலை 11, 2025 03:54 PM

திருச்சி: 'அங்கீகாரம் பெற, 8 சட்டசபை தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும். 8 சீட்டுகள் ஜெயிப்பதற்கு குறைந்தபட்சம் 10, 12 இடங்களில் நிற்க வேண்டும்' என ம.தி.மு.க., முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.
திருச்சியில் ம.தி.மு.க., முதன்மைச் செயலாளர் துரை வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 12 சீட்டுகள் நாங்கள் எங்கேயும் கேட்கவில்லை. குறைந்தபட்சம் எல்லா இயக்கங்களும் அதிக சீட்டுகள் கேட்கின்றனர். இயக்கங்கள் எந்த கூட்டணியிலும், கூடுதல் இடங்கள் கேட்கின்றனர். இது கட்சியின் உரிமை. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆசை.
அதே மாதிரி தான் நீங்கள் கேட்கும் போது, நானா சொல்லவில்லை. நீங்கள், எல்லோரும் கேட்கிறார்களே, நீங்கள் கேட்க மாட்டீர்களா என்று கேள்வி கேட்கும் போது நான் சொல்கிறேன், எங்களுக்கும் ஆசை இருக்கிறது. குறைந்தபட்சம் ஆசை. கட்சியின் அங்கீகாரம்.ம.தி.மு.க., மீண்டும் அங்கீகாரத்தை பெற வேண்டும். இது எங்களது அடிப்படை உரிமை.
அங்கீகாரம் பெற, 8 சட்டசபை தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும். 8 சீட்டுகள் ஜெயிப்பதற்கு குறைந்தபட்சம் 10, 12 இடங்களில் நிற்க வேண்டும். இது எங்களுடைய ஆசை. அதே வேளையில், இதனை முடிவெடுப்பது தலைவர் வைகோ. இதற்கு கூட்டணி தலைமை ஒப்புதல் கொடுக்க வேண்டும். இந்த சூழ்நிலையை தான் நான் விவரித்து சொல்லியிருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.