sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொள்கை எதிரி பாஜ; அரசியல் எதிரி திமுக: மாநாட்டில் விஜய் திட்டவட்டம்!

/

கொள்கை எதிரி பாஜ; அரசியல் எதிரி திமுக: மாநாட்டில் விஜய் திட்டவட்டம்!

கொள்கை எதிரி பாஜ; அரசியல் எதிரி திமுக: மாநாட்டில் விஜய் திட்டவட்டம்!

கொள்கை எதிரி பாஜ; அரசியல் எதிரி திமுக: மாநாட்டில் விஜய் திட்டவட்டம்!

73


UPDATED : ஆக 21, 2025 08:23 PM

ADDED : ஆக 21, 2025 05:20 PM

Google News

73

UPDATED : ஆக 21, 2025 08:23 PM ADDED : ஆக 21, 2025 05:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: '' நம்முடைய கொள்கை எதிரி பாஜ; அரசியல் எதிரி திமுக, '', என மதுரையில் நடந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசினார்.

சிங்கம் என்ன செய்யும்


மதுரையில் நடந்த தவெகவின் 2வது மாநில மாநாட்டில் விஜய் பேசியதாவது: ஒரு சிங்கம் எப்போதும் பெக்கூலியர் தான். ஒரு முறை சிங்கம் கர்ஜித்தால் அந்த சத்தம் 8 கிமீ தூரம் அதிரும். அனைத்து திசைகளிலும் அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க வராது. வேட்டையில் கூட உயிரோடு இருக்கும் விலங்குகளை தான் வேட்டையாடும். அதிலும் தன்னை விட பெரிய மிருகங்களை குறிவைத்து தாக்கும் ஜெயிக்கும். எவ்வளவு பசியிருந்தாலும், உயிரில்லாதது கெட்டுப்போனதை தொட்டுப்பார்க்காது. அவ்வளவு பெரிய சிங்கம் எதையும் தொடாது. தொட்டால் விடாது.

காட்டுக்குள் எல்லையை வகுத்து கட்டுக்குள் வைத்திருக்கும். சிங்கத்துக்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும். தனியாக இருக்கவும் தெரியும். தனியாக வர வேண்டும் என நினைத்தாலும் அஞ்சாமல் அலட்டிக்காமல் கெத்தா, தனியாக வந்து அத்தனைக்கும் தண்ணி காட்டும். எப்போதும் எதிலும் தனது தனித்தன்மையை இழக்காது. சிங்கம் எப்போதும் சிங்கமாகவே இருக்கும். காட்டில் நரிகள், குள்ளநரிகள் இருக்கலாம். ஆனால் அந்த காட்டின் ராஜா சிங்கம் தான்.

சிங்கத்தை பற்றி பேசிட்டு சிங்கக்குட்டிகளையும் சிங்கப்பெண்களை பேசாமல் இருக்க முடியுமா? என் நெஞ்சில் குடியிருக்கும் எனது தோழர், தோழிகளுக்கும் நேரில் வர முடியாத சூழலில் வீட்டில் இருந்தபடியே இந்த மாநாட்டை டிவியில் பார்த்து கொண்டிருக்கும் எனது அக்காக்கள், தாய்மார்களுக்கு எனது வணக்கம். என்னுடைய உயிர் வணக்கம். வீரம் விளையும் மதுரை மாமண்ணை வணங்குகிறேன்.

விஜயகாந்த்

மதுரை என்றால் நினைவுக்கு வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். நமது வைகை ஆறு தான். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மதுரை மீனாட்சி அம்மன்.இந்த மண்ணோட உண்மையான குணம் உணர்வுப்பூர்வமான மண். இந்த மண்ணில் வாழும் மக்களும் உணர்வுப்பூர்வமான ஆட்கள் தான்.இந்த மண்ணில் கால் வைத்த பிறகு ஒருவரை பற்றி தான் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. சினிமானாலும், அரசியல் என்றாலும் சரி நமக்கு பிடித்தது எம்ஜிஆர்.அவரோடு பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரை போன்ற குணம் கொண்ட விஜயகாந்த்துடன் பழகும் நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவர் மதுரை மண்ணை சேர்ந்தவர் தான். அவரை மறக்க முடியுமா?



தமிழக மக்கள் உணர்வுப்பூர்வமாக நம்முடன் நிற்பவர்கள். அதற்கு அடையாளம் தான் மதுரை மண். தவெக கையில் எடுத்து இருக்கும் அரசியல் அப்படி போன்றது தான். உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்லவர்கள் அரசியல், நல்லவர்களுக்கான அரசியல், நாட்டு மக்களுக்கான அரசியல் நல்லது மட்டுமே செய்யும் அரசியல்.

இதோ நம்முடைய 2வது மாநில மாநாடு வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.அப்படித்தான் இந்த மாநாட்டுக்கு பெயர் வைத்து இருக்கிறோம்.

எத்தனை கூக்குரல்


1967, 1977 ல் அரசியல் மாற்றம் நடந்ததை போல் 2026 லும் மாற்றம் நிகழப்போகிறது என்று உறுதியாக சொல்லும் மாநாடு தான் நம்முடைய 2வது மாநில மாநாடு. விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாடு வெற்றித்திருவிழா. அதற்கு பிறகு தட்பவெப்பநிலையை மாற்றியது. எத்தனை குரல். நாம் அந்த குரல்களை காதில் போடாமல் மக்கள் குரலை மட்டும் கேட்டுக் கொண்டு நமக்கு எதிராக வரும் அத்தனை கூக்குரலையும் சின்னதாக ஒரு சிரிப்போடு கடந்து வந்து இருக்கோம்.

அதில்லாமல் மாநாட்டில் ஒலிக்கும் குரல், இந்த ஒற்றை தமிழ் மகனின் குரல் மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழகத்தின் குரல். தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டில் ஒலிக்கும் குரல்இந்த சினிமா என்ற மாபெரும் கலை ஆயுதத்தின் வாயிலாக ஜாதி, மதம் இனம், பாலினம் கடந்து நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் நம்முடைய தோழர்களாக நம்மோடு பயணிக்க துவங்கியிருக்கும் அனைத்து மனிதர்களுக்காக ஒலிக்கும் குரல்.

மாநில உரிமைக்காக சமூக நீதிக்காக மதசார்பின்மைக்காக ஒலிக்கும் குரல்.

இந்த குரலுக்கு எதிராக எத்தனை கூக்குரல் வந்தாலும் ஓங்கி ஒலிக்குமே தவிர ஒரு நாளும் ஓயவே ஓயாது.
.

நாம் அரசியலுக்கு வருவதற்கு முன்னாடியே அவர் வரல, இவர் வரலை இவர் எங்கு வருவார் என ஜோசியம் சொன்னார்கள். கட்சி பெயர் அறிவித்த பிறகு கட்சி பெயர் தானே அறிவித்த பிறகு, மக்களிடம் பெயர் வாங்க வேண்டும் அது முடியாது என்றனர்.
பிறகு, மாநாடு எவ்வளவு பெரிய விஷயம். அதெல்லாம் ஒற்றை ஆளாக எப்படி செய்ய முடியும். ஆனந்த் பக்கத்தில் வைத்து கொண்டு மாநாடு எப்படி நடத்தி காட்ட முடியும். அதெல்லாம் முடியாது. மழை பெய்து கெடுத்துவிடும் என்றனர். பிறகு நடந்தது தெரியும்.





திரைக்கதை வசனம் பாடல்


இப்போது புதுசா ஒன்று சொல்ல துவங்கி உள்ளனர். ஆட்சியை பிடிப்பது எளிதானது இல்லை.இவர் நேரா ஷூட்டிங்கில் இருந்து வருவாராம். வந்து ஆட்சியை பிடிப்பாராம். இது எப்படி அவரால் முடியும்? அவரால் முடியவில்லை. இவரால் முடியவில்லை. அவருக்கே இத்தனை வருஷமாச்சு. இவரால் எப்படி முடியும் என ஒருபக்கம்.

இன்னொரு பக்கம் கூட்டம் எல்லாம் ஓகே தான். எப்படி ஓட்டாக மாறும். இப்படி திரைக்கதை, வசனம் பாடல்.

அரசியல்ஆய்வாளர்களுக்கு சொல்வது ஒன்று தான். லட்சக்கணக்கான கூட்டத்தில் மட்டும் விஜய் இருக்கிறார் என தப்புக்கணக்கு போட வேண்டாம் இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்லாமல், ஆட்சியாளர்களுக்கு வைக்கப்போகும் வேட்டா, நம்மை கோட்டைக்கு அனுப்பப்போகும் ஓட்டா என்பதை விரைவில் தெரிந்து கொள்வீர்கள். நம்முடைய கனெக்ட் எல்லாம் மக்களுடன் மட்டும் தான். நாம் யார் என அவர்களுக்கு தெரியும். அவர்கள் யார் என நமக்கு தெரியும். நாமும், மக்களும் எப்படி இருக்கிறோம் என ஆட்சியாளர்களுக்கு தெரியும்.



இருந்தாலும் விஜய் எதற்காக வந்துள்ளார். புதிதாக என்ன திட்டம் சொல்கிறார் என கேட்கின்றனர். சொல்கிறேன் தெரிந்துகொள்ளுங்கள்.

பெண் குழந்தைகள், பெண்கள் வயதானவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் எல்லாருக்கும் அரசின் சிறப்பு கவனம் தேவையோ அவர்களுக்கான அரசியல் அமைப்பதே நோக்கம்.

எதிரிகள் யார்

நம்முடைய நிலையில் வலிமையாக இருக்கிறோம். நம்முடைய ஒரே கொள்கை எதிரி பாஜ தான். நம்முடைய ஒரே அரசியல் எதிரி திமுக தான். ஏதாவது 'அண்டர்கிரவுண்ட் ஆதாயத்துக்காக டீல் போட்டு கொண்டு, கூட்டணி அமைத்து அரசியல் ஆதாயத்துக்காக ஊரை ஏமாற்றும் கட்சி தவெக அல்ல. யாருக்காகவும் எதற்காகவும் பயம் கிடையாது.



மாபெரும் பெண்கள் சக்தி, இளைஞர் சக்தி,மக்கள் சக்தி நம்முடன் இருக்கிறார்கள். உலகம் முழுதும் வாழும் அனைவரும் என்னை விஜய், விஜி, தளபதி, என சொந்தம் கொண்டாடும் அன்பும் ஆசியும் நம்முடன் இருக்கும்போது பாஜ உடன் கூட்டணிவைக்க நாம் என்ன உலக மகா ஊழல் கட்சியா என்ன.? இவ்வாறு விஜய் பேசினார்.






      Dinamalar
      Follow us