ADDED : டிச 24, 2025 06:58 AM

சென்னை: ''த.வெ.க., தலைவர் விஜய் தனியாக நிற்பதை விட, இணைந்து நின்றால், வெற்றி சுலபமாகும்,'' என, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தயாராக உள்ளது. தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும் இடையே தான் போட்டி என, விஜய் கூறுகிறார். ஆனால், தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்பது தான், தே.ஜ., கூட்டணி மற்றும் விஜய் நிலைப்பாடு.
விஜய் தனியாக நின்றால், அதை செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டும். விஜய் தனியாக நிற்பதை விட, அனைவரும் இணைந்து நின்றால் வெற்றி இன்னும் சுலபமாக இருக்கும்.
விஜயும், சீமானும் ஆர்.எஸ்.எஸ்., பிள்ளைகள் எனக்கூறிய வி.சி., தலைவர் திருமாவளவன், இன்னும் எத்தனை ஆர்.எஸ்.எஸ்., பிள்ளைகளை கண்டுபிடிக்க போகிறார் எனத் தெரியவில்லை.
அவர், தேடித் தேடி கண்டுபிடித்து, வயிறு எரியட்டும். யாராக இருந்தாலும், வேலை எடுத்து தான், அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். திருமாவளவனுக்கு வேலையில்லாமல் போகப் போகிறது. இவ்வாறு கூறினார்.

