திருச்சி திமுக.,வின் கோட்டை: பெருமைப்படும் கமல்ஹாசன்
திருச்சி திமுக.,வின் கோட்டை: பெருமைப்படும் கமல்ஹாசன்
UPDATED : ஏப் 02, 2024 02:00 PM
ADDED : ஏப் 02, 2024 01:52 PM

திருச்சி: தி.மு.க.,வின் கோட்டையாக உள்ள திருச்சியில் வந்து நாட்டை காக்கும் வேள்வியில், நானும் பங்கு கொள்வதில் எனக்கு பெருமை, என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கூறினார்.
திருச்சி, பெரம்பலுார் தொகுதிகளில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திருச்சி வந்தார். அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே மிகப்பழமையான கோட்டைகளில் ஒன்று செங்கோட்டை. பிரதமர் யாராக இருந்தாலும் அங்கிருந்து பேசுவார்கள். அதற்கு மூத்தது புனித ஜார்ஜ் கோட்டை.
இவை இரண்டுக்கும் மூத்தது திருச்சி மலைக்கோட்டை. அந்த கோட்டை இருக்கின்ற திருச்சி, இன்று தி.மு.க.,வின் கோட்டையாக உள்ளது. அந்த கோட்டை கதவுகள் திறந்து இருப்பதால் இங்கு வந்து நாட்டை காக்கும் இந்த வேள்வியில், நானும் பங்கு கொள்வதில் எனக்கு பெருமை. அமைச்சர் நேருவின் துணை இருப்பது எனக்கு பெருமை. திருச்சி திருப்புமுனையாக அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது மிகையான வார்த்தை இல்லை; நேர்மையான நம்பிக்கை. இவ்வாறு, அவர் கூறினார்.

