சிம்லா, குலு மணாலிக்கு ரயில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு
சிம்லா, குலு மணாலிக்கு ரயில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு
ADDED : ஏப் 12, 2025 01:37 AM

சென்னை:சென்னையில் இருந்து சிம்லா, குலு மணாலிக்கு, ரயில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, 'சீனிவாசா டூர் ஆப்பரேட்டர்ஸ்' உரிமையாளர் சேஷாத்ரி கூறியதாவது:
நாட்டின் பல்வேறு இடங்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளாக ரயில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கிறோம். கோடை விடுமுறையையொட்டி, பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். மொத்தம் 14 நாட்கள் கொண்ட ரயில் சுற்றுலாவுக்கு, சென்னையில் இருந்து மே 1, 12, 23ம் தேதிகளில் ரயில் புறப்படுகிறது.
தாஜ் மஹால், மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி, ரிஷிகேஷில் ராமன் ஜூலா, லக்ஷ்மன் ஜூலா, கங்கை நதியில் நீராடல், கீதா பவன், ஹரித்வாரில் கங்கா ஆரத்தி, பஞ்சலா சென்று குருத்வாரா பார்த்தல், சிம்லா, மணாலி, அமிர்தசரஸில் கோல்டன் டெம்பிள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான வாகா பார்டர் உள்ளிட்டவற்றை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
இவை தவிர, பாபா யாத்திரை, ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்கு ஏற்றாற்போல் கட்டணம் வசூலிக்கப்படும். 14 நாட்கள் கொண்ட ரயில் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு 23,000 ரூபாய், 'ஏசி' பெட்டி பயணத்துக்கு 26,000 ரூபாய் கட்டணம்.
ரயில், பஸ், உணவு, தங்கும் இடம் உள்ளிட்டவை இதில் அடங்கும். சுற்றுலா குறித்து மேலும் தகவல் பெற 93848 54561, 93848 54569 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

