ADDED : செப் 17, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை. இருப்பினும், ரேஷன் கடைகளுக்கு வேலை நாள். ஆனால், இன்று ரேஷன் கடைகள் திறக்கப்படாது என நேற்று தகவல்கள் பரவின. இதை மறுத்துள்ள உணவு வழங்கல் துறை அதிகாரிகள், 'இன்று வழக்கம் போல் ரேஷன் கடைகள் செயல்படும்' என்று தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சூரியசக்தி மின் நிலையங்களில், இம்மாதம் 12ம் தேதி, இதுவரை இல்லாத அளவாக 6,090 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. அதை விட அதிக அளவாக, 15ம் தேதி சூரியசக்தி மின் உற்பத்தி, 6,401 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.

