ADDED : மார் 16, 2024 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : திருநெல்வேலி - துாத்துக்குடி (06668), துாத்துக்குடி - திருநெல்வேலி (06667) முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
துாத்துக்குடி யார்டில் நடக்கும் பணிகளை முன்னிட்டு மார்ச் 17, 24, 31 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை, ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் நேரம் மாற்றம்
துாத்துக்குடி - ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் ( 19567) ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 11:35 மணிக்கு புறப்படும் ரயில் ஒரு மணிநேரம் 55 நிமிடம் தாமதமாக திங்கட்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு புறப்படும். இந்த மாற்றங்கள் மார்ச் 17, 24, 31ல் செயல்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

