ADDED : மார் 13, 2024 01:33 AM
சென்னை:மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை, கடந்த இரண்டு மாதங்களில், 9.33 லட்சம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில், கடந்த டிசம்பரில், 64.13 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்திருந்தனர். கடந்த மாதம் 29ம் தேதி நிலவரப்படி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை, 54.81 லட்சமாக குறைந்துள்ளது. இரண்டு மாதங்களில் பதிவு செய்திருந்தவர்கள் எண்ணிக்கை, 9 லட்சத்து 32 ஆயிரத்து 111 குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 18 வயதுக்கு உட்பட்டோர் 11 லட்சம்; 19 முதல் 30 வயது வரை உள்ள கல்லுாரி மாணவர்கள் 24.13 லட்சம்; 31 முதல் 45 வயது வரை உள்ள, அரசு பணி வேண்டி காத்திருப்போர் 17.22 லட்சம்; 46 முதல் 60 வயது வரை உள்ள வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள், 2.39 லட்சம்; 60 வயதுக்கு மேற்பட்டோர் 6,927 பேர் உள்ளனர்.
பதிவு செய்துள்ளோரின், 25.26 லட்சம் பேர் ஆண்கள், 29.55 லட்சம் பேர் பெண்கள், 285 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

