ADDED : ஜூலை 31, 2025 01:39 AM

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
அரசு போக்குவரத்து கழகங்களில், வேலை வாங்கித் தருவதாக கூறி, பணம் வாங்கி மோசடி செய்ததாக, அத்துறையின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இதில், 'செந்தில் பாலாஜியை காப்பாற்றும் நோக்கத்துடன், அவரது வாழ்நாள் முடியும் வரை விசாரணை முடியக்கூடாது என்பதற்காகவே, 2,000 பேரை, வழக்கில் தி.மு.க., அரசு சேர்த்துள்ளது' என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக காவல் துறையை, தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும். நீதி தவறிய செயலுக்காக, மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். அது மட்டுமின்றி, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

